×

பிங்கியுடன் கவர்ச்சியாக களமிறங்குது பாஜ

‘‘என்ன வேணும்னாலும் பண்ணிக்குங்க... எவ்வளவு செலவு வேணும்னாலும் செஞ்சுக்குங்க... இந்த தேர்தல்ல நிறைய தொகுதிகள்ல ஜெயிக்கிறோம்...  தட்டி தூக்குறோம்...’’ - இப்படி தேசிய பாஜ தலைமை, ஒடிசா பாஜ தலைமைக்கு உத்தரவிட்டுள்ளதாம். சரி... தேர்தல்னாலே பிரசாரம்தானே முக்கியம். 21 மக்களவை தொகுதிகள், 147 சட்டப்பேரவை தொகுதிகள்ல 4 கட்டமாக தேர்தல் நடக்குது...  எப்படியாவது மக்களை தங்கள் பக்கம் திசை திருப்பணும்னா, ‘கவர்ச்சிகரமா’ ஏதாவது பண்ணனும்னு, ஒடிசா மாநில பாஜ நிர்வாகிகள் ரூம் போட்டு  யோசித்திருக்கின்றனர்... கடைசியாக தங்கள் தரப்பு பேச்சாளர்கள் பட்டியல்ல கொண்டு போய் தேர்தல் ஆணையத்தில் கொடுத்திருக்கிறார்கள்...  முக்கியமாக சில நடிகைகளும் அந்த பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியல்ல மோடி, அமித்ஷா, அர்ஜூன் முண்டா, சிவ்ராஜ்சிங் சவுகான்,  ரமண்சிங் உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர் (என்ன  எதிர்பார்த்தது வரலைன்னு பார்க்குறீங்களா? வருது... வருது..). அடுத்ததாக எவர்கிரீன் கவர்ச்சிக்கன்னி ஹேமாமாலினிதான் டாப் 9ல இருக்காங்க  (மொத்தமே 9 நடிகைகள்தாங்க). இவங்களோடு பிங்கி பிரதான், அனு சவுத்ரி, மிஹிர் தாஸ், ஹர்ஹர் மொகோபத்ரா, மகேஸ்வதா ராய், சீதம் தாஸ்  உள்ளிட்ட நடிகர், நடிகைகளும் களமிறங்கி கலக்கப் போறாங்களாம்.
என்ன பேசணும்... எப்படி பேசணும்...

எங்கெங்க பேசணும்னு ஒரு சாட் போட்டு நடிகைகள் பிஏ வசம் பாஜ தலைமை ஒப்படைச்சிருச்சாம்... திரையில்  நடிப்பால் ரசிகர்களை, இளைஞர்களை கவர்ந்த ‘ஒடிசாவுட் ஹீரோயின்கள்’ (பாலிவுட், ஹோலிவுட், மல்லுவுட் மாதிரி ஒடிசாவுட்), பிரசாரத்திலும்  தங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள் என பாஜ விரும்புகிறதாம். ஒடிசாவில் காங்கிரஸ், பாஜ, பிஜூ ஜனதா தளம் என மும்முனைப்போட்டி நிலவுவது தெரிஞ்ச விஷயம்தான். பாஜவின் இந்த ஒடிசாவுட் படைக்கு  நிகராக, தங்கள் தரப்பிலும் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்களை பிரசாரத்தில் இழுப்பதற்காக காங், பிஜூ ஜனதா தளம் தரப்பும் யோசித்து  வருகிறதாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Baiju , bjp, pinky sexy
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: வாக்களிக்காமல் வெளியேறிய மமிதா பைஜு